டிஜிட்டல் பாதுகாப்பு ஆதாரவளங்கள்
8-12 வயது
நீங்கள் இணையத்தில் இயங்கத் தொடங்கும்போது பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது முக்கியம் ஆகும். ஆபத்துகளைக் கண்டறியவும் உங்கள் தகவலைத் தனிப்பட்டதாக வைத்துக்கொள்ளவும் உங்கள் திரை நேரத்தை சமநிலைப்படுத்தவும் இணைய அடாவடித்தனம் போன்றவைகளைச் கையாளவும் உதவும் சில ஆதாரவளங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நீங்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் ஆன்லைனில் இயங்கி மகிழ முடியும். இவற்றை நீங்களாகவே அல்லது ஒரு நண்பர் அல்லது பெற்றோருடன் சேர்ந்து ஆராயுங்கள்.

-
ஆன்லைன் அபாயங்கள்இணையம் ஏராளமான வேடிக்கைகளையும் கல்வி அறிவையும் வழங்குகிறது, ஆனால் போலி இணைப்புகள், மோசடிகள் போன்ற ஆபத்துகள் உள்ளன. எப்படிப் பாதுகாப்பாக இயங்குவது என்பதையும் எப்படி உங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்!
-
பாதுகாப்பான மற்றும் அபாயகரமான தொடர்புகள்ஆன்லைனில் பாதுகாப்பான தொடர்புகளை அடையாளம் கண்டு தீங்கு விளைவிக்கும் நோக்கங்களைக் கொண்டவர்களிடம் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
-
இணையவழி அடாவடித்தனம்இணைய அடாவடித்தனம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், அதை எவ்வாறு எதிர்கொள்வது அதைப் பற்றி எப்படிப் புகார் அளிப்பது மற்றும் அதை எதிர்கொள்பவர்களை எப்படி ஆதரிப்பது.
-
ஆன்லைன் தனியுரிமை மற்றும் டிஜிட்டல் ஒழுங்குமுறைஉங்கள் டிஜிட்டல் தனியுரிமையைப் பாதுகாக்க வலிமையான கடவுச்சொற்கள் முதல் தனிப்பட்ட தகவல்களைப் புத்திசாலித்தனமாகப் பகிர்வது வரை ஆன்லைன் தனியுரிமையின் இன்றியமையாதவைகளைக் குறித்துக் கற்றுக்கொள்ளுங்கள்.
-
ஆன்லைன் கேமிங் வழிகாட்டல்நிலையை உயர்த்துங்கள்! நீங்கள் ஆன்லைனில் விளையாடும்போது பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருங்கள். மோசமான நடத்தைகளைக் கண்டறிந்து ஆன்லைன் அபாயங்களைத் தவிர்க்கவும்.
-
திரை நேரம் மற்றும் டிஜிட்டல் நலம்உங்கள் டிவைஸ்களைப் பயன்படுத்தும்போது உங்கள் மன ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்கிறீர்களா? திரை நேரத்தை எவ்வாறு சமநிலைப்படுத்தி ஆரோக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த பழக்கவழக்கங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை இங்கே காணவும்.